சுடச்சுட

  

  கைத்தறி சங்கங்களின் கடனை தள்ளுபடி செய்யக் கோரிக்கை

  By புதுச்சேரி,  |   Published on : 26th September 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிரதம கைத்தறி சங்கங்களின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என புதுச்சேரி மாவட்ட கைத்தறி தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
   அச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
   ஆர்.குணசேகரன் (சிஐடியு) தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆர்.ராஜாங்கம், ஆர்.நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தினக்கூலியான ரூ.350-ஐ கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்குவது உத்தரவாதப்படுத்த வேண்டும், நெசவாளர்களுக்கு குறைந்தபட்ச உற்பத்தி தினும் தர வேண்டிய அளவை அரசு குழு போட்டு முடிவு செய்ய வேண்டும்.
   தமிழகத்தைப் போல் பிரதம சங்கங்களுக்கும் துணிக் கொள்முதல் மானியத்தை 20 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும். வரும் பண்டிகைகளை முன்னிட்டு ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரமும், மழைக்கால நிவாரணம் ரூ.3 ஆயிரமும் தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
   மேலும், கைத்தறி பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ஆர். ராஜாங்கம், செயலாளராக ஆர்.குணசேகரன் நியமிக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai