சுடச்சுட

  

  சென்டாக் உயிரியல் பாடப் பிரிவுகள்: இறுதிக்கட்ட கலந்தாய்வு செப்.28-க்கு ஒத்திவைப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 26th September 2016 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் 26-ஆம் தேதி நடைபெறவிருந்த சென்டாக் உயிரியல் பாடப்பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு, 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  புதுச்சேரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட உயிரியல் பாடப்பிரிவுக்கான, முதற்கட்ட சென்டாக் கலந்தாய்வு, கடந்த ஜூன் 24 தொடங்கி 29ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 25 தொடங்கி 27ஆம் தேதி வரையும் நடந்தது.
  இந்த நிலையில், உயிரியல் பாடப்பிரிவுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு செப்.26, 27 ஆகிய தேதிகளிலும், பி.பார்ம் பாடப்பிரிவுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு செப்.28ஆம் தேதியும் நடைபெறும் என சென்டாக் நிர்வாகம் அறிவித்திருந்தது.
  இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, இந்தக் கலந்தாய்வு வருகிற 28ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறும் என சென்டாக் தெரிவித்துள்ளது.
  மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை www.centaconline.in என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாமல் தரவரிசைப் பட்டியல் மதிப்பெண் வரம்புக்குள் வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அசல் மற்றும் ஒரு செட் நகல் சான்றிதழ்கள் எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நாள் நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
  மேலும், கலந்தாய்வில் பங்கேற்கும் எஸ்சி மற்றும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் ரூ.300-க்கும், இதர பிரிவினர் ரூ.750-க்கும் வரைவோலையை பட்ங் இர்ய்ஸ்ங்ய்ர்ழ், இஉசபஅஇ என்ற பெயரில் புதுச்சேரியில் செலுத்தத்தக்கவகையில் கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai