சுடச்சுட

  

  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மலையாள மக்கள் சார்பில் ஓணம் பண்டிகைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.
   புதுச்சேரியில் இயங்கிவரும் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை மற்றும் கல்லூரியில், நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மொழி பேசும் மாணவ, மாணவியர், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
   இவர்களில், மலையாள மொழி பேசும் மக்கள் ஒருங்கிணைந்து ஓணம் கொண்டாட்டத்தை நடத்தினர். கேரள பாரம்பரிய இசையான செண்டை மேளம் முழங்க இவ்விழா நடைபெற்றது. ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி.பரிஜா விழாவைத் தொடங்கி வைத்தார்.
   இதனை முன்னிட்டு காலையில் பூ அலங்காரப் போட்டி, பாட்டுப்போட்டி. கண்ணை மூடிக்கொண்டு ஓவியம் வரைதல் போட்டி போன்றவை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
   மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai