சுடச்சுட

  

  தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வலியுறுத்தல்

  By  புதுச்சேரி,  |   Published on : 26th September 2016 02:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வை அரசு உடனடியாக நடத்த வேண்டும் என புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் சங்கத் தலைவர் வை.பாலா வலியுறுத்தி உள்ளார்.

  அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் குறித்து சென்டாக் நிர்வாகம் தனது இணையதளத்தில், விகிதாச்சார அடிப்படையில் எந்தெந்த இடங்கள் எந்தெந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும்.

  வரும் 30ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் என்பதால் அனைத்து அதிகாரிகளும் ஒன்றிணைந்து சென்டாக் கலந்தாய்வினை எந்த தடையும் இன்றி வெளிப்படைத் தன்மையுடன் நடத்திட வேண்டும்.

  ஏற்கெனவே புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் 10 எம்பிபிஎஸ் இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 9 மருத்துவ இடங்களும், அதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 55 பல் மருத்துவ இடங்களும் காலியாக உள்ளன. வரும் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறும் 3ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வின்போது பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் விடுபட்ட 18 மருத்துவ இடங்களையும் பெற்று மேற்படி கலந்தாய்வை நடத்திட வேண்டும்.

   மேலும் நிர்வாக ஒதுக்கீட்டில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 300 மருத்துவ இடங்கள் நீட் மாணவர்களை கொண்டு நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி வரும் 30ஆம் தேதி அகில இந்திய அளவில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கடைசி நாளாகும். இதனைக் கருத்தில்கொண்டு புதுச்சேரியில் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அரசு கலந்தாய்வினை நடத்திட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai