சுடச்சுட

    

    திருத்தப்பட்ட வழிகாட்டி பதிவேடு: வருவாய்த் துறைச் செயலர் உத்தரவு

    By புதுச்சேரி,  |   Published on : 26th September 2016 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தப்பட்ட வழிகாட்டி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என வருவாய்த் துறைச் செயலர் கந்தவேலு அறிவுறுத்தியுள்ளார்.
     இதுதொடர்பாக அவர் துணை ஆட்சியர்கள், புதுச்சேரி மாவட்ட பதிவாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
     பட்ஜெட்டில் முதல்வர் அறிவித்தபடி நில மதிப்பு 2015-16ஆம் ஆண்டில் இருந்து 25 சதவீதம் குறைத்து, 2016-17ஆம் ஆண்டில் வருகிற 1.10.2016 முதல் அமல்படுத்த வேண்டும்.
     தற்போதுள்ள நில மதிப்பு வருகிற 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதற்காக துணை ஆட்சியர் மற்றும் வருவாய் அதிகாரிகள் மாநில தகவல் அதிகாரியுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். தேசிய தகவலியல் மையம் மூலம் வருகிற 27-ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட வழிகாட்டி பதிவேடுகளை செய்து முடிக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai