சுடச்சுட

  

  தொமுசவில் ஆட்டோ தொழிலாளர் சங்கங்கள் இணைப்பு விழா

  By புதுச்சேரி,  |   Published on : 26th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில், பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 11 ஆட்டோ தொழிலாளர் சங்கங்கள் தொமுசவில் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   முத்தியால்பேட்டை, கொசக்கடை வீதி, தீயணைப்பு நிலையம், நீதிமன்றம், நெல்லித்தோப்பு, இந்திராகாந்தி சிலை, சுல்தான்பேட்டை, வில்லியனுôர், அய்யங்குட்டிப்பாளையம் உள்ளிட்ட
   11 இடங்களில் இயங்கி வரும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மிஷேல் தலைமையில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தில் இணையும் விழா, தெற்கு மாநில திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
   தொமுச தலைவர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கினார். செயலர் அன்பழகன் வரவேற்றார். தொமுச கெüரவத் தலைவர் இரா. சிவா எம்.எல்.ஏ., தொமுசவில் இணைந்த ஆட்டோ சங்க தொழிலாளர்களை வரவேற்று பேசினார்.
   தொமுச துணைத் தலைவர் காயாரோகணம், துணைச் செயலாளர் இராமமூர்த்தி, நெல்லித்தோப்புத் தொகுதி செயலர் நடராஜன், டாக்டர் மாயக்கிருஷ்ணன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் சங்கர், முரளி, சீனுவாசன், முருகன், சபீர், சூசைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai