சுடச்சுட

    

    நவீன மீன் அங்காடி ஏலம்: இன்று செயல்விளக்கம்

    By புதுச்சேரி,  |   Published on : 26th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி ஏலம் தொடர்பாக திங்கள்கிழமை காலை 10 மணிக்கு அங்காடி வளாகத்திலேயே நேரில் செயல்விளக்கம் தரப்பட உள்ளது.
     இதுதொடர்பாக உழவர்கரை நகராட்சி ஆணையர் எம்எஸ்.ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக வங்கி நிதியில் லாஸ்பேட்டையில் 37,886 சதுர அடியில் கட்டப்பட்ட 2 தளம் கொண்ட நவீன மீன் அங்காடி உழவர்கரை நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
     இதில் ஒரு பனி உற்பத்தி பிரிவு, 2 குளிர் பதன சேமிப்பு கிடங்கு, உணவகம், ஏடிஎம், பொதுக்கட்டண கழிப்பிடம் போன்றவை தனித்தனியே ஓராண்டுக்கு நடத்துவதற்கான உரிமம் வழங்க பகிரங்க பொதுவாய்மொழி ஏலம் வரும் 28.9.16 புதன்கிழமை நடைபெறுகிறது.
     இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோருக்கு நவீன மீன் அங்காடியில் உள்ள மேற்கண்ட ஏலப்பொருள்கள் குறித்த சிறப்பு அம்சங்கள் குறித்த செயல் விளக்கம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நகராட்சி ஆணையரால் விளக்கப்படும். ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் இதில் தவறாது கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார் ரமேஷ்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai