சுடச்சுட

  

  புதுச்சேரியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட போர்ச்சுகல் அழகிகள்!

  By புதுச்சேரி,  |   Published on : 26th September 2016 08:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில், மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் போர்ச்சுகல் நாட்டு அழகிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
   சமுதாயத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை தனிமைப்படுத்துவதை விடுத்து, பிறரைப் போல நடத்த வேண்டும் என்ற நோக்கில், போர்ச்சுகல் நாட்டில் அழகிப்போட்டிகளில் வெற்றிபெற்ற சாரா சவேரி, கிறிஸ்டினா வியானா, வனேசா சவுசா ஆகியோர், புதுச்சேரியில், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் கலை நிகழ்ச்சிகளில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர்.
   இதற்காக புதுச்சேரியில் உள்ள சிறப்புப் பள்ளி மாணவர்கள், வைத்திக்குப்பத்தில் உள்ள ஆரோதன் கார்டனுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் போர்ச்சுகல் அழகிகளும் கலந்து கொண்டு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ந்தனர்.
   இந்த நிகழ்ச்சியின்போது, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் தாங்கள் தயாரித்த கலை பொருள்களையும் போர்ச்சுகல் அழகிகளுக்கு பரிசாக வழங்கினர்.
   இதனைத் தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின்படியும், சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு வலியுறுத்தும் வகையிலும் வைத்திக்குப்பம் சாலைகளில் குப்பைகளை அகற்றும் பணியிலும் போர்ச்சுகல் நாட்டு அழகிகளும், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளும் ஈடுபட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai