சுடச்சுட

  

  புதுச்சேரி-சந்திரகாச்சிக்கு அக். 22, 29-இல் சிறப்பு கட்டண ரயில்கள்

  By புதுச்சேரி,  |   Published on : 26th September 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி-சந்திரகாச்சி இடையே (சென்னை எழும்பூர் வழியாக) சிறப்பு கட்டண ரயில்கள் வரும் அக்டோபர் 22, 29 தேதிகளில் இயக்கப்படுகின்றன.
   புதுச்சேரியில் இருந்து சிறப்பு ரயில் எண். 06010 அக்டோபர் 22, 29 தேதிகளில் (சனிக்கிழமைகளில்) இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு, சந்திரகாச்சிக்கு (திங்கள்கிழமைகளில்) அதிகாலை 4.30 மணிக்கு சென்றடையும்.
   இச்சிறப்பு ரயில்கள் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடூர், நெல்லூர், ஒங்கோல், சிராலா, தெனாலி, விஜயவாடா, எலூரு, தாடெபள்ளிகூடம், ராஜமன்றி, சாமல்கோட், துவாடா, விஜயநகரம், ஸ்ரீஹாகுளம் ரோடு, பலாசா, பிரம்மாபூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பத்ராக், பாலசோர், கரக்கூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
   இதில் 2 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி 1, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 7, இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 6, சரக்கு பிரேக், வேன் இணைக்கப்பட்டிருக்கும். இத் தகவலை தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai