சுடச்சுட

    

    புதுச்சேரியில் மனைவி குழந்தையுடன் காணாமல் போய்விட்டார் என கணவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.
     பாக்கமுடையான்பட்டு லாஸ்பேட்டை பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஏழுமலை (35). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி சித்ரா (30), இரு பெண் குழந்தைகள் உள்ளன.
     கடந்த 17-ம் தேதி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சித்ரா 18-ம் தேதி தனது மூத்த மகளிடம், மயிலத்தில் உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு, இளைய மகளை தூக்கிக் கொண்டு சென்றார். தனது மனைவி மாமியார் வீட்டுக்குச் சென்று இருப்பது பற்றி ஏழுமலை மயிலத்தில் உள்ள மாமியாரிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது அங்கு சித்ரா வரவில்லை என்று தெரிவித்தனர்.
     இதனை அடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி, குழந்தை கிடைக்காததால் ஏழுமலை அளித்த புகாரின் அடிப்படையில் தன்வந்தரி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai