சுடச்சுட

    

    அம்மன் சிலை அகற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்

    By புதுச்சேரி,  |   Published on : 27th September 2016 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி அருகே அம்மன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     உறுவையாறு அருகே கீழ் அக்ரஹாரம் கிராமத்தில் பொதுமக்கள் கொட்டகை அமைத்து அதில் அம்மன் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர். இந்நிலையில் சிலைக்கு முறையாக அனுமதி பெறவில்லை எனக்கூறி வில்லியனூர் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் திங்கள்கிழமை அம்மன் சிலையை எடுத்துச் சென்று விட்டனர்.
     இதனைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் உறுவையாறு-அபிஷேகப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம், எஸ்ஐ கிருஷ்ணராஜ் ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அம்மன் சிலை பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதி கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai