சுடச்சுட

    

    ஆட்டோ கட்டணம் விவகாரம்: தொழிற்சங்கங்களுடன் முதல்வர் ஆலோசனை

    By புதுச்சேரி,  |   Published on : 27th September 2016 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் தொடர்பாக அரசியல் கட்சியினர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் நாராயணசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
     புதுவையில் ஆட்டோ கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.40 எனவும், கிலோ மீட்டருக்கு ரூ.20 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் வேலை
     நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
     இந்த நிலையில் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் மற்றும் பிற கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சட்டப் பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன், சிவா, அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
     கூட்டத்தில் அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். பின்னர் முதல்வர் பேசியது:
     ஆட்டோ கட்டணம் நிர்ணயம், இருசக்கர வாகன வாடகை நிலையங்களுக்கு அனுமதி தரக் கூடாது, மீட்டர், ஜிபிஆர்எஸ் கருவிகள் வழங்க வேண்டும் என கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். நல வாரியம் அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
     ஆட்டோ தொழிலாளர்களின் நலனை அரசு கருத்தில்கொள்ளும்.
     அதேவேளையில் மக்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் இந்த கோரிக்கைகள் குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai