சுடச்சுட

    

    உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான அரசின் உதவித் தொகையினை ரா.சிவா எம்எல்ஏ திங்கள்கிழமை வழங்கினார்.
     ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் 33 பயனாளிகளுக்கு கலப்புத் திருமண உதவித் தொகை, தொடர் நோய் சிகிச்சை நிதி, வீடுகட்டும் திட்ட இரண்டாம் கட்ட தவணைத் தொகை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி கல்வே பங்களாவில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், புதுச்சேரி தொழில் வளர்ச்சிக் கழகத் தலைவர் ரா.சிவா எம்எல்ஏ பங்கேற்று பயனாளிகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார்.
     நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத் துறை நல ஆய்வாளர் விநாயகமூர்த்தி, திமுக மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதிச் செயலர் சக்திவேல், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பிரபாகரன் சாஸ்திரி, தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai