சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் தட்டாஞ்சாவடி கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     மாநிலச் செயலர் முருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களின் போனஸ் தொகையை 7 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், மாத ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், விபத்து இழப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும், வாரிய உறுப்பினராக விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
     அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன தேசிய தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலர் புருசோத்தமன், துணைத் தலைவர் மோதிலால், மாநிலக்குழு பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai