Enable Javscript for better performance
குழந்தைகள் பொருள்கள் விநியோக அலுவலகத்தில் ரூ.2 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் பொருள்கள் விநியோக அலுவலகத்தில் ரூ.2 லட்சம் திருட்டு

    By புதுச்சேரி,  |   Published on : 27th September 2016 09:47 AM  |   அ+அ அ-   |    |  

    புதுவையில் குழந்தைகளுக்கான பொருள்களை விநியோகம் செய்பவரின் அலுவலகத்தை உடைத்து ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
     புதுவை ஜீவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு புது சாரம் ராஜீவ் காந்தி நகர் 45 அடி சாலையில் குழந்தைகளுக்கான பொருள்களை கடைகளுக்கு விநியோகம் செய்யும் கிடங்கு உள்ளது. இந்த கிடங்குக்கு மேல் தளத்தில் அவருடைய அலுவலகம் உள்ளது.
     இந்நிலையில், சனிக்கிழமை இரவு பணியை முடித்த கார்த்திக் மற்றும் அலுவலக ஊழியர்கள், அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றுள்ளர். இதையடுத்து, திங்கள்கிழமை காலை அலுவலகத்தை திறக்க கார்த்திக் வந்துள்ளாôர்.
     அப்போது, கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.இது குறித்து டி.நகர் காவல் நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸார், விரல் ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
     இந்நிலையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதால், போலீஸாருக்கு அது தொடர்பான காட்சிகள் கிடைக்கவில்லை.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai