சுடச்சுட

    

    சென்டாக் உயிரியல் பாடப் பிரிவுக்கு நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு தொடக்கம்

    By புதுச்சேரி,  |   Published on : 27th September 2016 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்டாக் சார்பில் உயிரியல் பாடப் பிரிவுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
    இதுதொடர்பாக சென்டாக் அமைப்பு இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் 2016-17ஆம் கல்வி ஆண்டின் உயிரியல் பாடப் பிரிவுக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஜூன் 24 முதல் 29ஆம் தேதி வரையிலும், 2ஆம் கட்ட கலந்தாய்வு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது.
    இந்த நிலையில் எம்பிபிஎஸ்-10, பிடிஎஸ்-55, நர்சிங்-27 உள்பட உயிரியல் பாடப் பிரிவில் மொத்தம் 112 இடங்கள் காலியாக இருந்தன.
    இதையடுத்து, காலியிடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு 26, 27ஆம் தேதிகளிலும், பி.பார்ம் பாடப் பிரிவுக்கு 28ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    இந்நிலையில், நிர்வாகக் காரணங்களால் 26ஆம் தேதிக்கான கலந்தாய்வு, 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சென்டாக் நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது தனியார் கல்லூரிகளில் இருந்து சென்டாக் கலந்தாய்வுக்கு கூடுதலாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    இந்நிலையில் உயிரியல் பாடப் பிரிவுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு 28, 29ஆம் தேதிகளில் நடைபெறும். அதன்படி, 28ஆம் தேதி காலை 9 மணிக்கு 200.000 முதல் 184.444 வரை, 10 மணிக்கு 184.333 முதல் 176.444 வரை, 11 மணிக்கு 176.333 முதல் 169.333 வரை, நண்பகல் 12 மணிக்கு 169.000 முதல் 162.000 வரை, மதியம் 2 மணிக்கு 161.666 முதல் 155.333 வரை, 3 மணிக்கு 155.000 முதல் 147.666 வரை, மாலை 4 மணிக்கு 147.333 முதல் 139.666 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்ற புதுச்சேரி அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
    29ஆம் தேதி காலை 9 மணிக்கு 139.333 முதல் 131.666 வரை, 10 மணிக்கு 131.500 முதல் 123.777 வரை, 11 மணிக்கு 123.666 முதல் 114.500 வரை, நண்பகல் 12 மணிக்கு 114.333 முதல் 103.833 வரை, மதியம் 2 மணிக்கு 103.666 முதல் 90.833 வரை, 3 மணிக்கு 90.667 முதல் 80.000 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
    மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை www.centaconline.in  என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாமல் தரவரிசைப் பட்டியல் மதிப்பெண் வரம்புக்குள் வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள், தங்களது அசல் மற்றும் ஒரு செட் நகல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
    மேலும் கலந்தாய்வில் பங்கேற்கும் எஸ்சி மற்றும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் ரூ.300-க்கும், இதர பிரிவினர் ரூ.750-க்கும் வரைவோலையை The Convenor, CENTAC என்ற பெயரில் பெற்று புதுச்சேரியில் செலுத்தத்தக்க வகையில் கொண்டு வரவேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai