Enable Javscript for better performance
ஜிப்மரில் புதிதாக நரம்பியல் உடற்பயிற்சி பிரிவு: இயக்குநர் தொடங்கி வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    ஜிப்மரில் புதிதாக நரம்பியல் உடற்பயிற்சி பிரிவு: இயக்குநர் தொடங்கி வைத்தார்

    By புதுச்சேரி,  |   Published on : 27th September 2016 09:42 AM  |   அ+அ அ-   |    |  

    ஜிப்மர் நரம்பியல் சிகிச்சை துறை சார்பில் புதிதாக நரம்பியல் உடற்பயிற்சி பிரிவை இயக்குநர் எஸ்.சி.பரிஜா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
     மேலும், நோயாளிகளின் பராமரிப்பை அதிகரிக்கும் வகையில், நரம்பியல் மறுவாழ்வு பிரிவும் இணைந்துள்ளது.
     நியுரான்ஸ் மற்றும் மைய நரம்பு மண்டலம் அதன் நரம்பு மரபணு சேதம் அடைந்தால், இழந்த நியுரான்களை ஈடுகட்டுவது முடியாததாகும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நரம்பியல் நோய்கள் தாக்கம் அதிகரித்து வருகிறது.
     இந்நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல வகையான மறுவாழ்வு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜிப்மரில் கடந்த 2015-ஆம் ஆண்டு நரம்பியல் துறையில் பக்கவாத மறுவாழ்வு வசதியும் இணைந்துள்ளது. இதில், பக்கவாதம் மற்றும் பல நரம்பியல் ஒடுக்க நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
     குறிப்பாக கணினி அறிவாற்றல் பயிற்சி, பிசியோதெரபி, மோட்டோமேட், இசை பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், மறுவாழ்வுக்காக இலவசமாக ஊன்றுகோல்கள், வாக்கர்ஸ் வழங்கப்படுகின்றன.
     சராசரியாக மாதம் 50 நோயாளிகள் நரம்பியல் மறுவாழ்வு சிகிச்சை மூலம் பயன்பெறுகின்றனர். இதன் தொடர்ச்சியாக நரம்பியல் உடற்பயிற்சி பிரிவையும் இயக்குநர் எஸ்.சி.பரிஜா தொடங்கி வைத்தார். நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் சுனில் கே.நாராயணன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai