சுடச்சுட

  

  ஜிப்மரில் புதிதாக நரம்பியல் உடற்பயிற்சி பிரிவு

  By புதுச்சேரி,  |   Published on : 27th September 2016 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜிப்மர் நரம்பியல் சிகிச்சை துறை சார்பில் புதிதாக நரம்பியல் உடற்பயிற்சி பிரிவை இயக்குநர் எஸ்.சி.பரிஜா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
   நியுரான்ஸ் மற்றும் மைய நரம்பு மண்டலம் அதன் நரம்பு மரபணு சேதம் அடைந்தால், இழந்த நியுரான்களை ஈடுகட்டுவது முடியாததாகும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நரம்பியல் நோய்கள் தாக்கம் அதிகரித்து வருகிறது.
   இந்நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல வகையான மறுவாழ்வு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜிப்மரில் கடந்த 2015-ஆம் ஆண்டு நரம்பியல் துறையில் பக்கவாத மறுவாழ்வு வசதியும் இணைந்துள்ளது. இதில், பக்கவாதம் மற்றும் பல நரம்பியல் ஒடுக்க நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக கணினி அறிவாற்றல் பயிற்சி, பிசியோதெரபி, மோட்டோமேட், இசை பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், மறுவாழ்வுக்காக இலவசமாக ஊன்றுகோல்கள், வாக்கர்ஸ் வழங்கப்படுகின்றன.
   சராசரியாக மாதம் 50 நோயாளிகள் நரம்பியல் மறுவாழ்வு சிகிச்சை மூலம் பயன்பெறுகின்றனர். இதன் தொடர்ச்சியாக நரம்பியல் உடற்பயிற்சி பிரிவையும் இயக்குநர் எஸ்.சி.பரிஜா தொடங்கி வைத்தார். நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் சுனில் கே.நாராயணன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai