சுடச்சுட

  

  நாள் ஒன்றுக்கு கூடுதலாக 50 ஆயிரம் லி. பால் உற்பத்தி செய்ய இலக்கு

  By புதுச்சேரி,  |   Published on : 27th September 2016 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 50 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
   புதுச்சேரியில் பால் உற்பத்தியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால், வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், பால் உற்பத்தியை பெருக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் வி.நாராயணசாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
   அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, அரசுச் செயலர் அருண்தேசாய், கூட்டுறவு பதிவாளர் சிவக்குமார், வேளாண் இயக்குநர் ராமமூர்த்தி, கால்நடைத் துறை இயக்குநர் பத்மநாபன் உள்பட பலர் பங்கேற்றனர்.
   கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: நபார்டு வங்கி மூலம் கறவைப் பசுக்கள் வாங்க கடனுதவி வழங்க வேண்டும். இந்திய அரசு திட்டத்தின் மூலம் வங்கிகளில் 30 சதவீத மானியத்தில் கடனுதவி தரப்படும். விவசாயிகள் இதன் மூலம் கறவை மாடுகள் வாங்கி பால் உற்பத்தியை பெருக்கலாம்.
   மேலும், பசுந்தீவன புல் உற்பத்தி புதுச்சேரியில் இல்லை. பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முன்வருவோருக்கு ரூ.500 மானியம் தரும் திட்டத்தை செயல்படுத்தி தீவன உற்பத்தியை பெருக்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி கறவைப் பசுக்களை விற்காமல், வளர்ப்பவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். தற்போது புதுச்சேரியில் 1.5 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
   பற்றாக்குறை நிலவி வருவதால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 50 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai