சுடச்சுட

  

  பூமியான்பேட்டை ஜவஹர் நகரில் அனுமதி பெறாமல் வீட்டு மனைகள் விற்பனை: துணைநிலை ஆளுநரிடம் புகார்

  By புதுச்சேரி,  |   Published on : 27th September 2016 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி பூமியான்பேட்டை ஜவஹர் நகரில் வீட்டு மனைகள் அரசின் அனுமதி பெறாமல் விற்பனை செய்தவர்களிடம் ஈவுத் தொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜிவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
   இது குறித்து அதன் தலைவர் பி.ரகுபதி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
   புதுச்சேரி அரசின் நகர மற்றும் கிராம அமைப்புத் துறை மூலம் பூமியான்பேட்டை ஜவஹர் நகரில் நில ஆர்ஜிதம் மற்றும் மேம்பாட்டுத் திட்ட விதி 1969-ன் கீழ் 47 எம்எல்ஏக்கள், 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டன. இந்த மனைகளை வேறு நபருக்கு விற்பனை செய்யும் பட்சத்தில் அனுமதி பெற வேண்டும் மற்றும் அந்த விற்பனை தொகையில் அரசுக்கு 50 சதவீதம் ஈவுத்தொகையை செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
   இந்த வீட்டுமனைகளைப் பெற்ற 50 பேரில் 9 பேர் அரசின் அனுமதி பெற்று விற்பனை செய்து அரசுக்கு செலுத்த வேண்டிய 50 சதவீத ஈவுத்தொகையை செலுத்தி உள்ளனர். ஆனால், தற்போதைய அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி, எதிர்க்கட்சித் தலைவர் ந.ரங்கசாமி, எம்எல்ஏ சிவா, முன்னாள் முதல்வர்கள் ஜானகிராமன், எம்டிஆர்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன், ஏழுமலை, நாஜிம் மற்றும் 15 முன்னாள் எம்எல்ஏக்கள் என 25 பேர் அரசின் அனுமதி பெறாமல் மனைகளை விற்பனை செய்தும், அரசுக்கு செலுத்த வேண்டிய ஈவுத்தொகைகளை செலுத்தாமலும் உள்ளனர்.
   இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசின் அனுமதி பெறாமல் விற்பனை செய்த இவர்கள் எந்த ஆண்டு எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்துள்ளனர் என்பதை கண்டறிந்து, அதற்கான ஈவுத்தொகைகளை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் ரகுபதி தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai