சுடச்சுட

    

    பேரவையை நீக்கப்பட்ட ஊழியர்கள் முற்றுகையிட முயற்சி: போலீஸ் தடியடி

    By புதுச்சேரி,  |   Published on : 27th September 2016 09:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில், பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித் துறை ஊழியர்கள், சட்டப் பேரவையை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனர். அவர்களை, போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
     புதுச்சேரியில், முந்தைய ஆட்சியின்போது பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான தினக்கூலி ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். விதிகளுக்கு மாறாக இவர்கள் நியமிக்கப்பட்டதாக வந்த புகாரை தேர்தல் துறை ஆய்வு செய்து, மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இவர்கள், மீண்டும் பணி கோரி பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
     இந்த நிலையில், பொதுப்பணித் துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களையும் மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திங்கள்கிழமை புதுச்சேரி சட்டப் பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீஸார், தலைமைத் தபால் நிலையம் அருகே தடுத்து நிறுத்தினர். அப்போது, போராட்டக்குழுத் தலைவர் தெய்வீகன், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீஸார் அவரைத் தடுத்து, அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர், அவரை கைது செய்தனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai