சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளி குழந்தைகள் விடுதி: கட்டுமானப் பணிகள் தொடக்கம்

    By புதுச்சேரி,  |   Published on : 27th September 2016 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி வெங்கடேஸ்வரா நகரில் சமூக நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
     ரூ.2.15 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள இந்த விடுதியில் நவீன சமையலறை, உணவுக்கூடம், அலுவலக அறை, உடல்நல பாதுகாப்பு அறை, நவீன குளியலறை மற்றும் கழிப்பறை அமைக்கப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜையில் சட்டப்பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மு.கந்தசாமி மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai