Enable Javscript for better performance
"கடற்கரையில் வாரத்தில் 3 நாள்களுக்கு கலை நிகழ்ச்சிகள்'- Dinamani

சுடச்சுட

    

    "கடற்கரையில் வாரத்தில் 3 நாள்களுக்கு கலை நிகழ்ச்சிகள்'

    By புதுச்சேரி,  |   Published on : 28th September 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை கடற்கரையில் வாரத்தில் 3 நாள்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
     புதுவையில் அனைவருக்கும் சுற்றுலா என்ற தலைப்பில் உலக சுற்றுலா நாள் விழா செவ்வாய்க்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     விழாவில் முதல்வர் பேசியது: புதுவை, காரைக்கால், மாஹே, யேனாம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.335 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சுற்றுலா, மனமகிழ் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்த இந்த தொகை செலவு செய்யப்படும்.
     சுற்றுலாத் துறையின் வளர்ச்சியால் கடைகளில் விற்பனை அதிகரிக்கிறது. உணவகங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
     இதனால் மக்களிடம் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் புதுவைக்கு 1 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
     அவர்களில் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம்.
     கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை புனரமைக்கப்படும். இதனால் அங்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
     வரும் நாள்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் புதுச்சேரி கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கடற்கரையில் 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வசதி புதன்கிழமை செயல்பாட்டுக்கு வரும். டிஸ்னி வேர்ல்டு, கடலுக்கு அடியில் அருங்காட்சியகம், கடல் விளையாட்டு ஆகிய வசதிகளும் செய்யப்படும். இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றார் முதல்வர்.
     பார்வையற்றோர் நடனம்: விழாவின் ஒரு பகுதியாக பெங்களூர் ஸ்ரீ ரமண மகரிஷி பார்வையற்றோர் பள்ளி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் புதுவை பல்கலைக்கழக சுற்றுலாத் துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மஸ்கராத், தப்பாட்டம், சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai