சுடச்சுட

  

  கருவடிக்குப்பம் கோயில் இடத்தை சுழற்சி முறையில் குத்தகைக்கு விட வலியுறுத்தல்

  By புதுச்சேரி,  |   Published on : 28th September 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, கருவடிக்குப்பம் கருமாரியம்மன் கோயில் இடத்தை சுழற்சி முறையில் குத்தகைக்கு விட வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
   அந்தக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் முத்தரையர்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில இளைஞரணித் தலைவர் என்எஸ்.பிரகாஷ் வரவேற்றார்.
   மாநிலத் தலைவர் கி.மஞ்சினி தலைமை வகித்தார். தொழிற்சங்கத் தலைவர் சு.விநாயகமுருகன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் கே.வெங்கடேசன், எல்.கருணாநிதி, எஸ்.காந்தி, சங்கரன், சீனிவாசன், கொளஞ்சிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கருவடிக்குப்பம் கருமாரி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் அதை நிரந்தரமாக ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
   எனவே, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அந்த இடத்தை சுழற்சி முறையில் குக்தகைக்கு விட வேண்டும்.
   சித்தானந்தர் கோயில் அருகே உள்ள சாராயக்கடையால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும், கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
   மது அருந்தி விட்டு வருவோரால் சாலை விபத்துகளும் நேரிடுகின்றன. போர்க்கால அடிப்படையில் சாராயக்கடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai