சுடச்சுட

  

  சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகம் முற்றுகை: பணி நீக்கப்பட்ட ஊழியர்கள் 100 பேர் கைது

  By  புதுச்சேரி,  |   Published on : 28th September 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதுடன், சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்தை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் முற்றையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
   புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் பணி வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
   ஆனால், இது தொடர்பாக அரசாங்கம் அவர்களை அழைத்து பேசவில்லை.
   இதனால் உலக சுற்றுலா தினமான செவ்வாய்க்கிழமை கறுப்பு தினமாக அனுசரித்து, புதுச்சேரி முழுவதும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சுவரொட்டி ஒட்டினர்.
   மேலும், கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலாத் துறை தலைமை அலுவலகம் அருகே சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்த அரசுப் பேருந்து முன் படுத்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
   அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு அவர்கள் சுற்றுலா அலுவலக வாயில் முன் அமர்ந்து மற்ற ஊழியர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
   இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பெரியகடை போலீஸார் கைது செய்தனர்.
   இந்த சம்பவம் காரணமாக கடற்கரை சாலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai