சுடச்சுட

  

  நவீன கரும்பு சாகுபடி திட்டத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 28th September 2016 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நவீன கரும்பு சாகுபடி திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.
   புதுச்சேரி வேளாண்துறை துணை இயக்குநர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
   புதுச்சேரி மத்திய அரசின் முக்கிய திட்டங்களின் ஒன்றான தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் புதுச்சேரி வேளாண்மை துறையால் செல்படுத்தப்படுகிறது. அத்திட்டத்தின் கீழ் கரும்பு உற்பத்தியை இரண்டுமடங்காக அதிகரிக்கம் நோக்கோடு நீடித்த நவீன கரும்பு சாகுபடி திட்டம் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
   இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு குத்துக்கு ஒரு கரும்பு நாற்று நடவு செய்தல், சொட்டு நீர் பாசன அமைப்பு மூலம் மேம்பட்ட நீர் மற்றும் உர நிர்வாகம் போன்ற உத்திகளை செய்து கரும்பு உற்பத்தியை இரண்டு மடங்காக்குவதாகும். இந்தாண்டும் வேளாண்துறை இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
   எனவே இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்பும் வேளாண் பெருமக்கள் நீடித்த நவீன கரும்பு சாகுபடி திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை கூடுதல் வேளாண் இயக்குனர் (பயிற்சி வழி தொடர்பு திட்டம்), தட்டாஞ்சாவடி அலுவலகத்தில் வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளலாம்.
   பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான இணைப்புகளான விவசாய அடையாள அட்டை நகல், நிலத்தின் வரைபடம் (எப்எம்பி) மற்றும் வருவாய்த்துறையிடம் பெறப்பட்ட நில சான்றுகளுடன் அந்தந்த பகுதி உழவர் உதவியகங்களில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
   இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் கரும்பு விவசாயிகளுக்கு எக்டர் ஒன்றுக்கு 100 சதவித மானியமாக ரூ. 1.75 லட்சம் மதிப்பிலான சொட்டு நீர் பாசனம் அமைப்பு, உரிய இடுபொருட்களான கரும்பு நாற்றுகள் மற்றும் நீரில் கரையும் உரங்கள் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுககு குறைந்தபட்சம் ஓர் ஏக்கர் அதிகபட்சம் இரண்டு எக்டர்க்கு மானியம் வழங்கப்படும்.
   அதனால் புதுச்சேரி பகுதி கரும்பு சாகுபடி செய்யும் விவசாய பெருமக்கள் இத்திட்டத்தில் இணைந்து அதிக மகசூல் மற்றும் வருவாய் பெற்று பயனடையலாம்.
   கடந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் 3 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai