சுடச்சுட

  

  பூட்டிய வீட்டுக்குள் மருத்துவர் மர்மச் சாவு

  By புதுச்சேரி  |   Published on : 28th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் பூட்டிய வீட்டுக்குள் தனியார் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
   தஞ்சாவூரைச் சேர்ந்தவர் இளங்கோவன் (64), மருத்துவர். இவர், புதுவை கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
   இளங்கோவன் பேராசிரியர்களின் குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார். சென்னையில் உள்ள மகனை பார்க்க அவரது மனைவி சென்றுவிட்ட நிலையில், வீட்டில் இளங்கோவன் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அவரது மனைவி இளங்கோவனை பலமுறை தொலைபேசியில் அழைத்தும் அவர் பதில் அளிக்கவில்லையாம்.
   பின்னர், பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் மற்றொரு பேராசிரியரான அமர்நாத்தை வீட்டுக்குள் சென்று பார்க்குமாறு இளங்கோவனின் மனைவி கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் சென்று பார்த்தபோது, கதவு திறக்கப்படவில்லையாம். இதைத் தொடர்ந்து, திருபுவனை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இளங்கோவன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், இளங்கோவன் உடல்நிலை மோசமானதன் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai