சுடச்சுட

  

  பேனர்களை அகற்ற நகராட்சி ஆணையர்கள் உத்தரவு

  By புதுச்சேரி,  |   Published on : 28th September 2016 09:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், கட்-அவுட்களை வியாழக்கிழமைக்குள் (செப். 29) அகற்ற வேண்டும் என புதுச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகரன், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
   இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 23ஆம் தேதி புதுவை அரசு தலைமைச் செயலர் தலைமையில் பேனர் மற்றும் கட்-அவுட்களை அகற்றுதல் தொடர்பானக் கூட்டம் நடைபெற்றது.
   இதில் ஐ.ஜி. கண்ணன் ஜெகதீசன், அரசு செயலர் சுந்தரவடிவேலு, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர்கள் கலந்துகொண்டனர்.
   கூட்டத்தில் செப்.30ஆம் தேதிக்குள் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள கட்-அவுட்களை அகற்றும் பணியில் நகராட்சி, பொதுப்பணித் துறையினர் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. எனவே பொதுமக்கள் தாங்களாகவே செப்.29ஆம் தேதிக்குள் தங்களது பேனர், கட்-அவுட்களை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai