சுடச்சுட

  

  மின்விசை கைத்தறியை மானியத்தில் வழங்கக் கோரிக்கை

  By புதுச்சேரி,  |   Published on : 28th September 2016 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கைத்தறித் தொழிலாளர்களுக்கு மின்விசை கைத்தறியை முழு மானியத்தில் வழங்க வேண்டும் என புதுவை வட்டார கைத்தறி - சட்டத்தறி மாவு தோய்ச்சல் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) வலியுறுத்தி உள்ளது.
   அந்தச் சங்க நிர்வாகிகள் கூட்டம் பெத்துசெட்டிப்பேட்டையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆர்.செல்வராசு தலைமை வகித்தார். செயலர் ஆர்.ரவிச்சந்திரன் செயலறிக்கை சமர்ப்பித்தார். மாநிலத் தலைவர் விஎஸ்.அபிஷேகம், சங்க செயல்பாடுகள் குறித்து விவரித்தார். பொருளாளர் பி.ராமலிங்கம், நிர்வாகிகள் காந்திமதி, கே.வசந்தா, வி.வசந்தி, சுசிலா, தாமரைச்செல்வன், பி.ஆறுமுகம், குழந்தைவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.
   அரசு ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கும் துணிகளை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக உள்ளூர் கைத்தறித் தொழிலாளர்கள் நெய்யக்கூடிய துணி வகைகளை கொள்முதல் செய்து வழங்க வேண்டும். மின்விசைக் கைத்தறியை உடனே அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு மானியத்தில் வழங்க வேண்டும். வீட்டிலேயே மின்விசைக் கைத்தறியை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
   நெசவாளர்களுக்கு பான்டெக்ஸ் பங்காக வழங்க வேண்டிய 5 சதவீத ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும். போனஸ் தொகையை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும். பொங்கல் பண்டிகைக்கான பரிசுப் கூப்பன் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai