சுடச்சுட

  

  புதுச்சேரி அமெச்சூர் கேரம் சங்கம் சார்பில் வரும் அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் கேரம் போட்டிகள் நடைபெறவுள்ளன என அதன் பொதுச் செயலாளர் ஞான இருதயராஜ் தெரிவித்துள்ளார்.
   இதுகுறித்து, செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:
   புதுவையைச் சேர்ந்த கேரம் விளையாட்டு வீரர்களுக்கான ஆடவர், மகளிர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் வகையில் வரும் அக்.1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கேரம் விளையாட்டு நடைபெற உள்ளது.
   போட்டிகள் மிஷன் வீதி சந்திப்பில் உள்ள புனித அன்னம்மாள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும்.
   இதில், பங்கேற்று வெற்றி பெறும் வீரர்கள், வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி தரப்படும் என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai