சுடச்சுட

    

    அரசின் உத்தரவுகளை மீறும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை: அதிமுக

    By புதுச்சேரி,  |   Published on : 29th September 2016 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் அரசின் உத்தரவுகளை மீறும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.
     சட்டப்பேரவை அதிமுக தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து மாணவர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.
     காலாப்பட்டில் உள்ள தனியார் கல்லூரி கூடுதலாக 50 எம்பிபிஎஸ் இடங்கள் கேட்டு மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்தது. புதுவை அரசு அளித்த தடையில்லா சான்றின் அடிப்படையில் அந்தக் கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்களை மருத்துவ கவுன்சில் வழங்கியுள்ளது.
     இதை பெறுவதற்கு முன்பு தனியார் கல்லூரி நிர்வாகம் 18 இடங்களை அரசுக்கு ஒதுக்குவதாக சம்மதம் தெரிவித்திருந்தது.
     இது தொடர்பாக பேரவையில் அதிமுக சார்பில் கேள்வி எழுப்பியபோது தனியார் கல்லூரி பெற்ற 50 கூடுதல் இடங்களில் 18 இடங்களை சென்டாக்கிற்கு பெறுவோம் என முதல்வர் நாராயணசாமி உறுதியளித்திருந்தார்.
     இந்தச் சூழலில் தற்போது நீதிமன்ற தடை ஆணையை காட்டி கல்லூரி நிர்வாகம் அரசுக்கு 18 இடங்களை தர மறுக்கிறது.
     அரசின் உத்தரவுகளை மீறும் தனியார் கல்லூரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அரசு கையகப்படுத்த வேண்டும். அத்துடன் அவர்களுக்கு அரசு வழங்கும் எந்த சலுகைகளையும் அளிக்கக்கூடாது என அதில் தெரிவித்துள்ளார் அன்பழகன்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai