சுடச்சுட

    

    இளைஞர்கள் மீது தாக்குதல்: காவல் நிலையம் முற்றுகை

    By புதுச்சேரி,  |   Published on : 29th September 2016 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை லாஸ்பேட்டையில் இளைஞர்களை போலீஸார் தாக்கியதாக கூறி காவல்நிலையம் முன்பு பொதுமக்கள் மறியல் செய்தனர்.
     புதுவை லாஸ்பேட்டை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர் பிரகாஷ்ராஜ் மற்றும் சம்பூர்ணம், ராகேஷ், கார்த்திக். இவர்கள் 4 பேரும் செவ்வாய்க்கிழமை இரவு தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த லாஸ்பேட்டை போலீஸார், விசாரித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் 4 பேரையும் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மாணவர் பிரகாஷ்ராஜிக்கு காயம் ஏற்பட்டது.
     இந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், லாஸ்பேட்டை காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தி சாலை மறியல் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த எஸ்.பி. ரச்சனா சிங், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai