சுடச்சுட

  

  எஸ்.எஸ்.பி. குறித்து அவதூறு: முன்னாள் காவல் ஆய்வாளர் கைது

  By புதுச்சேரி,  |   Published on : 29th September 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் மீது அவதூறு பரப்பிய ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
   புதுவை காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றியவர் ராஜாராமன் (59). இவர் கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற பிறகு, தொல்காப்பியர் லஞ்ச ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் அமைப்பு நடத்தி வருகிறார். மேலும் இவர் மீது கிருமாம்பாக்கம், ரெட்டியார்பாளையம், மேட்டுப்பாளையம், உருளையன்பேட்டை போன்ற காவல் நிலையங்களில் வழக்கு உள்ளது.
   இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், அவருக்கு குற்றவாளிகளின் பாதுகாவலர் என்ற விருது வழங்குவதாக விளம்பரம் செய்தார்.
   இதற்கிடையே, புதுச்சேரிக்குள் ராஜாராமன் நுழைய போலீஸார் 144 தடை விதித்தனர். மேலும், அவரை கைது செய்வதற்காக தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
   இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஜிப்மர் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சை பெற வருவதாக உருளையன்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், ராஜாராமனை கைது செய்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai