சுடச்சுட

  

  கடலூரை இணைக்கும் தரைப்பாலம் திறப்பு: நீண்ட நாள் கோரிக்கை ஏற்பு

  By புதுச்சேரி,  |   Published on : 29th September 2016 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  10 கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடலூரை இணைக்கும் கொமந்தான்மேடு தரைப்பாலம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
   கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடந்த 2015 ஆண்டு புதிதாக கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது. இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆறு ஓடுகிறது.
   கடலூர் மற்றும் புதுவை எல்லையை இணைப்பதற்கு தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் முடிவில் புதுவை மாநில எல்லையில் சாராயக் கடை உள்ளது. ஆட்சியர் அலுவலகம் எதிரே சாராயக் கடை இருப்பதால் கடலூர் மாவட்ட நிர்வாகம் அப்பாலத்தில் குறுக்கே இரும்பு தடுப்பு வேலியமைத்தது.
   இதனால் அப்பாலத்தை கடக்கும் மாணவர்கள் மற்றம் முதியோர், கர்ப்பிணிகள் என 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் 12 கி.மீ. சுற்றி வரும் அவல நிலை ஏற்பட்டது.
   இதனால் ஆராய்ச்சிக்குப்பம், பரிக்கல்பட்டு, கொமந்தான்மேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த இரும்பு வேலியை அகற்றக் கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
   இந்நிலையில், புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசிடம் இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று அரசு அங்கிருந்த சாராயக் கடையை அப்புறப்படுத்தி உத்தரவிட்டது. இதையடுத்து அந்த தரைப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
   இந்நிகழ்ச்சியில் பாகூர் எம்.எல்.ஏ. என்.தனவேலு பங்கேற்று தரைப்பாலத்தை திறந்து வைத்தார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai