சுடச்சுட

  

  கடலோர பாதுகாப்பு ஒத்திகை: தீவிரவாதிகள் வேடமணிந்த 4 போலீஸார் சிக்கினர்

  By புதுச்சேரி  |   Published on : 29th September 2016 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் ஆபரேஷன் சாகர் கவாச் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
   தமிழகம், புதுவை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள கடற்கரையை ஒட்டிய மாநிலங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
   புதன்கிழமை காலை தொடங்கி இந்த ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமையும் நடைபெறுகிறது.
   ஒத்திகையின் போது போலீஸாரின் ஒரு பிரிவினர் ரெட் ஃபோர்ஸ் என்ற பெயரில் கடல் வழியாக ஊடுருவி வருவார்கள். அவர்களிடம் போலி துப்பாக்கி, வெடிகுண்டுகள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவை இருக்கும். ஆனால், ரெட் ஃபோர்ஸ் போலீஸார் எப்போது எங்கு வருவார்கள் என்பது போலீஸாருக்கு தெரிவிக்கப்படாது.
   இதனால் ஊடுருவும் தீவிரவாதிகள் வேடத்தில் இருக்கும் போலீஸாரை, பணியில் இருக்கும் போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் தீவிரவாதிகள் எவ்வாறு கடல் வழியாக ஊடுருவுகிறார்கள் என்பது குறித்த தெளிவும், சதித் திட்டங்களை முறியடிக்கும் பயிற்சியும் போலீஸாருக்கு கிடைக்கும்.
   மேலும், இந்த ஒத்திகை குறித்து மீனவர்கள், கடற்கரையோர தங்கும் விடுதிகள் வைத்துள்ளோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், புதுவையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
   4 போலீஸார் சிக்கினர்: இந்நிலையில், இந்த ஒத்திகையின் போது தவளக்குப்பம் பகுதியில் உள்ள லீபாண்டி ஹோட்டல் அருகே ஊடுருவ முயன்ற 4 தமிழகத்தைச் சேர்ந்த ரெட் ஃபோர்ஸ் பிரிவு போலீஸாரை, புதுவை கடலோர காவல்படை போலீஸார் பிடித்தனர்.
   அவர்களிடம் இருந்து போலி துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், தொலை தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai