சுடச்சுட

  

  புதுவை அருகே கொத்தபுரிநத்தம் கிராமத்தில் செங்குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
   கொத்தபுரிநத்தம் கிராமத்தில் திருபுவனை மின்னணு தொழிற்சாலைக்குச் செல்லும் சாலையில் உள்ள மரத்தில் செங்குளவி கூடு கட்டியுள்ளது.
   இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழை காரணமாக அந்தக் குளவிகள் வெளியே வந்தன. அதனால் அவ்வழியே சென்ற பெண்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் சிரமத்திற்குள்ளாயினர்.
   இதில், அருணாச்சலம் (63) என்பவர் செங்குளவியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
   மேலும் மணிகண்டன், பிரியா, சந்தோஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai