சுடச்சுட

  

  சேதமான கதவணையால் வீணாகும் கோர்க்காடு ஏரி நீர்!

  By புதுச்சேரி,  |   Published on : 29th September 2016 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் பருவ மழைக்கு முன்னதாக கோர்க்காடு ஏரி மதகு கதவணையை சரி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
   புதுச்சேரியில் மொத்தம் 84 ஏரிகள் உள்ளன. இதில் ஏம்பலம் தொகுதியில் கோர்க்காடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு 300 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள ஏரி, புதுச்சேரியின் 3-அவது பெரிய ஏரியாக திகழ்கிறது. இந்த ஏரிக்கு மழைக்காலத்தில் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள வரத்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வருகிறது. இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம், செம்பியபாளையம், புதுக்குப்பம், தனத்துமேடு ஆகிய கிராமங்களில் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
   இங்கு தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம், செம்பியபாளையம், புதுக்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 150 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
   மேலும், கோர்க்காடு கிராமத்தில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.
   கதவணை சேதம்: அண்மைக்காலமாக பலத்த மழை பெய்தும், இந்த ஏரி அதன் முழு கொள்ளளவை எட்ட முடியாமல் போனது. இதற்குக் காரணம் பல ஆண்டுகளாக ஏரி மதகில் உள்ள இரண்டு கதவணைகள் உடைந்து சேதமடைந்து இருப்பதுதான்.
   கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் பலத்த மழை பெய்தபோது ஏரியில் தண்ணீர் பெருகியது. ஆனால், அந்த தண்ணீர் சேதமடைந்த கதவணைகள் வழியாக வெளியேறி, கடலில் கலந்து வீணானது.
   எனவே, பருவ மழைக்கு முன்னதாக கோர்க்காடு ஏரி மதகு கதவணையை சரி செய்ய துணைநிலை ஆளுனர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai