சுடச்சுட

    

    தேசிய யோகா போட்டி: அக்.2-இல் புதுவை அணிகள் தேர்வு

    By புதுச்சேரி,  |   Published on : 29th September 2016 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய யோகா போட்டிகளுக்கான புதுச்சேரி மாநில அணிகள் தேர்வு வரும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறுகிறது என புதுச்சேரி யோகா மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் வளர்ச்சி சங்கம் தெரிவித்துள்ளது.
     அதன் பொதுச் செயலர் வே.தசரதன் வெளியிட்ட அறிக்கை:
     யோகா பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் தென்னிந்திய யோகா போட்டிகள் கர்நாடக மாநிலம் உடுப்பியில் வரும் அக்.14-16 தேதிகளிலும், தேசிய அளவிலான யோகா போட்டிகள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நவம்பர் 12-16 தேதிகளில் நடைபெறவுள்ளது.
     இந்த இரு போட்டிகளில் பங்கேற்கும் புதுச்சேரி மாநில அணிகள் தேர்வு அக்டோபர் 2-ம் தேதி காலை 8 மணிக்கு ரெயின்போ நகரில் உள்ள பீஸ் கியூர் யோகா மைய கிளையில் நடைபெறும்.
     ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 8-11, 11-14, 14-17, 17-21, 21-25, 25-35, 35 வயதுக்கு மேல் என 7 பிரிவுகளில், 6 வகை போட்டிகளில் தேர்வு நடைபெறும். ஒவ்வொரு பிரிவில் இருந்தும் புதுச்சேரி அணிக்கு என 3 ஆண்கள், பெண்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவர்.
     அணித் தேர்வுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். பொதுச் செயலாளர், பாண்டிச்சேரி யோகா மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் 14, மூன்றாவது குறுக்குத்தெரு, தமிழ்த்தாய் நகர், புதுச்சேரி- என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது செல்லிடப்பேசி 9043488115, 9894388115-ல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai