சுடச்சுட

  

  பதவி உயர்வுக்கான கேட் தேர்வுகளை நடத்த வேண்டும்: நீதித்துறை ஊழியர் சங்கம்

  By புதுச்சேரி,  |   Published on : 29th September 2016 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி நீதித்துறையில் பதவி உயர்வுக்கான கேட் தேர்வுகளை நடத்த வேண்டும் என நீதித்துறை ஊழியர் சங்கம் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளது.

   புதுச்சேரி நீதித்துறை ஊழியர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
   புதிய நிர்வாகிகளான தலைவர் குணசேகர், பொதுச் செயலர் லோகமுருகன், இணைச் செயலர் ஷம்சத்நிஷா, செயற்குழு உறுப்பினர்கள் விஜயா, காந்தி, வெங்கடேசன், சுப்பையா, சாரதி, சிவராமன், பாலமுருகன் ஆகியோர் முதல்வர் நாராயணசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
   பின்னர் அவரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நீதித் துறையில் 2010ம் ஆண்டு முதல் கேட் மற்றும் நீதித்துறை தேர்வு நடத்தப்படவில்லை. இந்தத் தேர்வு நடத்தப்படாததால் இளநிலை, முதுநிலை எழுத்தர்கள், ஜூனியர் சுருக்கெழுத்தர்கள் மூப்பு இருந்தும் பதவி உயர்வு பெற முடியவில்லை.
   எனவே, உடனடியாக இந்தத் தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும். நீதிமன்ற அமீனாக்கள் தங்கள் வாகனத்தில் நாள்தோறும் 40 முதல் 50 கி.மீ. வரை சென்று நீதிமன்ற உத்தரவுகளை கொடுத்து வருகின்றனர்.
   இதற்காக மாதம் 50 லிட்டர் பெட்ரோல் அல்லது அதற்கு இணையான ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நீதித்துறை ஊழியர்களுக்கு தனியாக இடம் தேர்வு செய்து அவர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு கட்டித்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai