சுடச்சுட

    

    பல்கலை.யில் இடஒதுக்கீடு கோரி இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

    By புதுச்சேரி,  |   Published on : 29th September 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய பல்கலை.யில் முதுநிலை பட்டதாரி, ஆராய்ச்சி பாடப் பிரிவுகளில் இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்கலைக்கழக வளாகம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     மத்திய கல்வி நிறுவனங்களில் சமூக நீதியை நிலை நாட்டும் வகையில், மத்திய அரசு கடந்த 2006-ல் இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், புதுவை பல்கலை.யில் பட்டதாரி, முதுகலை பட்டதாரி, ஆராய்ச்சி பாடப் பிரிவுகளில் எஸ்.சி. 15 சதவீதம், பழங்குடியினர் 7 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் பல்வேறு குழப்பங்களும், குளறுபடிகளும் உள்ளன.
     மத்திய அரசு, தேசிய எஸ்.சி. ஆணையம், பழங்குடியினர் ஆணையம், பல்கலைக்கழக மானியக்குழு போன்றவற்றில் புகார் செய்தும் பலனில்லை.
     மேலும், அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவ, மாணவிகளுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஆர். விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
     தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கே.முருகன், சலீம், ராமமூர்த்தி, கீதநாதன், தினேஷ் பொன்னையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai