சுடச்சுட

    

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் புதுவை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் அ.அறிவுநம்பிக்கு ஜியு.போப் விருது வழங்கப்பட்டது.
     பாரிஸ் நகரில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் உலகத் தமிழியல் திருக்குறள் மாநாடு நடைபெற்றது.
     கனடா, இலங்கை, ஜெர்மனி, சுவிஸ், மலேசியா, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து அறிஞர்கள் கலந்துகொண்டனர். மாநாடு நிறைவில் ஐரோப்பியத் தமிழறிஞர்கள் வீரமாமுனிவர், ஜி.யு.போப், கால்டுவெல். தமிழ்வளர்செம்மல் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.
     புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் அ.அறிவுநம்பியின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி ஜி.யு. போப் விருது வழங்கப்பட்டது. ரஷ்ய நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் அலெக்ஸாண்டர் டுபான்ஸி இந்த விருதை வழங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சச்சிதானந்தம், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் வாழத்திப் பேசினர்
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai