சுடச்சுட

    

    அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு தெருமுனை பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு காந்தி வீதியில் நடைபெற்றது.
     புதுச்சேரி காங்கிரஸ் அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், நகரப் பகுதியில் அதிகரித்துள்ள கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். தெருநாய்களை பிடிக்க வேண்டும். முத்தியால்பேட்டை மார்க்கெட்டை உடனே திறக்க வேண்டும். அமைப்புசார தொழிலாளர்கள் நலச் சங்கத்தை வாரியமாக மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட மக்கள் அடிப்படை பிரச்னைகளை தீர்க்கக் கோரி பிரசாரம் நடைபெற்றது.
     பெருமாள்கோயில் கிளைச் செயலாளர் கோ.மணவாளன், முத்தியால்பேட்டை கிளைச் செயலாளர் என்.பாரி ஆகியோர் கூட்டாக தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன், நகரக்குழுச் செயலாளர் மதிவாணன், பிரதேசக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
     டி.என்.பாளையம்
     டி.என். பாளையத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரசார கூட்டத்துக்கு எஸ்.ராமஜெயம் தலைமை வகித்தார். பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், நகரக்குழுச் செயலாளர் மதிவாணன், பிரதேசக்குழு உறுப்பினர் சந்திரா மற்றும் கலியமூர்த்தி, ஜெகதீசன், ராமசாமி, மோகன் ஆகியோர் பேசினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai