Enable Javscript for better performance
அதிக கட்டண புகார்: மாணவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    அதிக கட்டண புகார்: மாணவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

    By புதுச்சேரி,  |   Published on : 30th September 2016 09:43 AM  |   அ+அ அ-   |    |  

    அதிக கட்டணம் செலுத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதுச்சேரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
     புதுச்சேரியில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணமாக பெருந்தொகை கொடுத்து சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
     புதுவையில் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் உள்பட 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ரூ.20 லட்சம் வரை கட்டணமாக அளித்து மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 1000 எம்பிபிஎஸ் இடங்களில் 283 இடங்கள் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டுள்ளன.
     மீதமுள்ள 717 இடங்களை கல்லூரி நிர்வாகங்கள் நிரப்புகின்றன. சென்டாக் மூலம் சேரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.25 லட்சத்தை கல்விக் கட்டணமாக அரசு செலுத்தினாலும் கூடுதலாக தொகையை செலுத்த வேண்டியுள்ளது.
     இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எவ்வாறு இவ்வளவு பெருந்தொகையை செலுத்தியது எப்படி என விளக்கம் கேட்டு நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     

    kattana sevai