சுடச்சுட

    

    அரசு மருத்துவமனையில் நவீன உபகரணங்கள்: அமைச்சர் மல்லாடி தொடங்கி வைத்தார்

    By புதுச்சேரி,  |   Published on : 30th September 2016 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே உள்பட பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள், சேவைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
     இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், 600-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.
     இந்நிலையில், மருத்துவமனையில் நோயாளிகள் நலனுக்காக பல்வேறு நவீன வசதிகளை அரசு ஏற்படுத்த உத்தரவிட்டது. இதன்படி, நவீன வசதிகளுடன் கூடிய மின்தூக்கி (லிப்ட்), நவீன மயமாக்கப்பட்ட டிஜிட்டல் எக்ஸ்ரே அறை, மேம்படுத்தப்பட்ட உயிர் வேதியியல் துறை, இருதய அறுவை சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள தீவிர இருதய அறுவை சிகிச்சை கண்காணிப்புப் பிரிவு போன்றவற்றை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் திறந்து வைத்தார்.
     நிகழ்ச்சிக்கு சுகாதாரத் துறை செயலாளர் பிஆர்.பாபு தலைமை வகித்தார். இயக்குநர் கேவி.ராமன் முன்னிலை வகித்தார். மருத்துவக் கண்காணிப்பாளர் எஸ்.மோகன்குமார், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கேஜி.ரவி, மக்கள் தொடர்பு அலுவலர் மருத்துவர் எம்.ஆத்மநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai