சுடச்சுட

    

    புதுவையில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை அதிகாலை பலத்த இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
     புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்பத்தின் தாக்குதல் காரணமாக மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
     இந்நிலையில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை அதிகாலை பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
     இதன் காரணமாக சாலையின் இரு மருங்கிலும் மழை நீர் வெள்ளமென ஓடியது. வெப்பத்தின் கொடுமைக்கு ஆளான மக்கள் மழை காரணமாக ஏற்பட்ட குளிர்ச்சியால் மகிழ்ச்சி அடைந்தனர்.
     இதேபோல, வில்லியனூர், திருக்கனூர், மதகடிப்பட்டு உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai