சுடச்சுட

    

    கைத்தறி நெசவாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

    By புதுச்சேரி,  |   Published on : 30th September 2016 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கைத்தறி நெசவாளர்களுக்கு தடையின்றி பாவு- நூல் மற்றும் கூலி வழங்கக் கோரி, இராட்டை சுற்றி, கஞ்சி காய்ச்சும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     புதுச்சேரி பிரதேச கைத்தறித் தொழிலாளர்கள் (சிஐடியு ) சங்கம் சார்பில், புதுவை கூட்டுறவுத் துறை பதிவாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கச் செயலாளர் ஆர்.குணசேகரன் தலைமை வகித்தார்.
     நிர்வாகிகள் டி.முருகன், ஆர்.ராஜாங்கம், கே.முருகன், வி.மனோகரன், ஆனந்து, தேவி, வசந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது, புதுச்சேரியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு பாவு நூல் வழங்குதல், குறைந்தபட்ச கூலியாக ரூ.350 நிர்ணயம் செய்தல், பிரதம நெசவாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதி தர வேண்டும்.
     கூட்டுறவுத் துறை பதிவாளர் மேற்பார்வையில் நூல் வங்கியை உருவாக்க வேண்டும், மழைக்கால மானியத்தை ரூ.1500-ல் இருந்து ரூ.3000-ஆக உயர்த்த வேண்டும்.
     பிரதம சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம், பணப் பயன் நிலுவைகளை உடனே வழங்க வேண்டும். தலைமைச் சங்கமான பாண்டெக்சில் உள்ள காலிப் பணியிடங்களில் பிரதம கூட்டுறவு சங்க ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 100-க்கும் மேற்பட்டோர் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai