சுடச்சுட

  

  சட்டக் கல்லூரி மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்

  By புதுச்சேரி,  |   Published on : 30th September 2016 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சட்டக் கல்லூரி மாணவர்களை சேர்க்காததைக் கண்டித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு அரசு சட்டக் கல்லூரி அருகே ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்கி படிப்பது வழக்கம்.
   ஆனால், விடுதியில் சட்டக் கல்லூரி மாணவர்களை சேர்க்கவில்லை. உடனே அவர்களை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
   ஆனால், அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதி
   திராவிடர் நலத்துறை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தனர்.பின்பு உள்ளே சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணிக்கு வந்த ஊழியர்களை மாணவர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
   இதையடுத்து, அங்கு வந்த கோரிமேடு போலீஸார், மாணவர்களை கலைந்து போகுமாறு கூறியதால் அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
   இதுகுறித்து, தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, விடுதியில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai