சுடச்சுட

    

    சென்டாக்: உயிரியல் பாடப் பிரிவு கலந்தாய்வு நிறைவு

    By புதுச்சேரி,  |   Published on : 30th September 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட உயிரியியல் பாடப் பிரிவுகளுக்கான சென்டாக் இறுதிக்கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை நிறைவடைந்தது.
     புதுச்சேரியில் உயிரியல் பாடப் பிரிவுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இதில் 23 எம்பிபிஎஸ் இடங்களும், 11 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின. நிறைவு நாளான வியாழக்கிழமை 139.333 முதல் 80.000 வரை கட்ஆப் மதிப்பெண் எடுத்த 1931 பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
     இந்நிலையில், பிடிஎஸ் -6, நர்சிங் - 22, பிபிடி - 1, எம்எல்டி - 3 என 32 இடங்கள் மட்டும் காலியாக இருந்தன. இதில், பிடிஎஸ் இடங்கள் கலந்தாய்வு தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிரம்பின. தொடர்ந்து நர்சிங், பிபிடி, எம்எல்ஏ பாடப் பிரிவுகள் மதியம் 12 மணி அளவில் நிரம்பியது. இதனால், பிற்பகல் 2 மணிக்கு மேல் கலந்தாய்விற்கு வந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai