சுடச்சுட

    

    நவராத்திரி கலைப் பொருள்கள் கலைவிழா தொடக்கம்

    By புதுச்சேரி,  |   Published on : 30th September 2016 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கலைப்பொருள்கள் கலைவிழா புதுச்சேரி கடற்கரையில் வியாழக்கிழமை தொடங்கியது.
     கிராப்ட் பவுண்டேசன் சார்பில், கடற்கரை காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் 49 வகையான பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
     26 நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான கலை பொருள்கள் மற்றும் அலங்காரப் பொருள்கள், உணவு சமைக்கும் மண்பாண்ட பொருள்கள் உள்ளிட்டவை காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வரும் 2-ம் தேதி ஒரு நாள் சிற்பப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் களிமண்ணில் சிற்பம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
     கைவினை கலைப்பொருள்கள் அழியாமல் இருப்பதற்கு பாதுகாக்க இக்கண்காட்சி நடத்தப்படுகிறது என்று தேசிய விருதாளர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai