சுடச்சுட

  

  நீட் தேர்ச்சி பெற்றவர்கள் தனியார் மருத்துவ  கல்லூரிகளில் அனுமதிக்க சேர்க்கை குழு தலையீடு

  By புதுச்சேரி,  |   Published on : 30th September 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்ச்சி பெற்றி மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவது தொடர்பாக அரசின் சேர்க்கைக் குழு வியாழக்கிழமை கலந்தாய்வை நடத்தியது.
   தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்ச்சி பெற்றவர்கள் தான் தகுதி அடிப்படையில் சேர்க்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
   ஆனால், புதுவையில் நீட் தேர்ச்சி பெற்றவர்களை சேர்க்க தனியார் மருத்துவக் கல்லூரிகள் முன்வரவில்லை. நீட் தேர்ச்சி பெற்றாலும் பெருந்தொகை கட்டணமாக செலுத்த வேண்டும் என தனியார் கல்லூரிகள் வலியுறுத்தியதாக புகார்கள் வந்தன.
   இதனால், நீட் தகுதி பெற்றவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதுதொடர்பாக மாணவ-பெற்றோர் நலச் சங்கங்களும் போராட்டங்கள் நடத்தினர்.
   இந்நிலையில் புதுச்சேரி அரசால் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் தலைமையிலான சேர்க்கை குழுவிடம் இப்பிரச்னை தொடர்பாக 92 பேர் புகார்கள் அளித்திருந்தனர். இதுதொடர்பாக வியாழக்கிழமை லாஸ்பேட்டை பிப்மேட் அலுவலகத்தில் சேர்க்கை குழு பரிசீலனை செய்தது.
   பின்னர் நீட் தேர்ச்சி பெற்ற புதுவை மாணவ, மாணவிகள் பட்டியல் தகுதி அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
   இதற்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டது. இதன்படி நீட் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளில் வெள்ளிக்கிழமை அணுகலாம் என சேர்க்கை குழு உத்தரவிட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குநர் கேவி.ராமன் கூறியது: நீட் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். வெள்ளிக்கிழமை தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளை மாணவ, மாணவிகள் அணுகலாம் என்றார். சேர்க்கை குழுவின் உத்தரவின்படி மாணவ, மாணவிகள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படுவர்களா எனத் தெரியவில்லை. ஏற்கெனவே 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பாடுகள் குறித்து கட்டணக்குழுத் தலைவர் உயர்நீதிமன்றத்திடம் புகார் செய்துள்ளார். மருத்துவக் கல்லூரிகளில் சேர செப். 30-ம் தேதி இறுதி நாளாகும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai